வாழை மரம் வடக்குப் பக்கமாகத் தார் போடக்கூடாதா? காரணம் என்ன? / கேள்வி - பதில்

வாழை மரம் வடக்குப் பக்கமாகத் தார் போடக்கூடாது. அப்படிப் போட்டால் அந்த வீட்டில் துன்பம் ஏற்படும் என்கிறார்களே? உண்மையா?

 - சராயு பாலச்சந்தர், அரக்கோணம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ண்மைதான். ஆனால் இதற்கும் வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை. இது விவசாயத்தோடு தொடர்பு கொண்டது. வாழை பயிரிட உகந்த மாதமாக, ஆடி மாதத்தைச் சொல்வோம். ‘ஆடிப் பட்டம் தேடி விதை' எனும் பழமொழி தெரிந்தது தானே! அந்த நேரத்தில் வீசும் காற்றை, ஆடிக்காற்று என்றே சொல்வார்கள். இதையே இன்னொரு விதமாகச் சொன்னால், ‘தென் மேற்குப் பருவக்காற்று' என்றும் சொல்வோம். 

இந்தக் காற்று முறையாக வீசியாக, சரியாக வீசினால், வாழை மரம் வடக்குப் பார்த்துத் தார் போடும். அதை வைத்துப் பயிர், பச்சைகள் எல்லாம் நன்றாக விளையும் என அறியலாம். அவ்வாறு இல்லாமல் வாழை வேறு திசை நோக்கித் தார் போட்டால், ஆடிக்காற்று சரியாக இல்லை; பயிர், பச்சைகள் ஒழுங்காக விளையாது; உணவுப் பண்டங்களுக்குத் திண்டாட்டம் ஏற்படலாம் என்பதை யூகித்து அறியலாம். ஆகவே இது, வாழைத்தார், தார் போடும் விஷயம், விவசாயத்துடன் தொடர்பு கொண்டது. இதை வீட்டோடு இணைத்துக் குழம்ப வேண்டாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 08.07.2025   

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்