பட்டாசு வெடிக்க தமிழகத்தில் கட்டுப்பாடா? / கடும் விளாசலில் ஆசிரியர் பகுதி...


ஆசிரியர் பகுதி

தீபாவளிக்கும் அரசாங்கத்திற்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும், தீபாவளிக்கு குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று கட்டணையிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை காலை - மாலை என வெடிக்கும் கட்டுப்பாடுகளின் நேரம் அதிகமாக இருக்கும்.

தற்போது இந்தாண்டு, காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சட்டம் பிறப்பித்துள்ளது. காலை ஒரு மணிநேரம் மாலை ஒரு மணி நேரம்... எப்படி ஐயா பட்டாசு வெடிக்க முடியும்?

இரண்டு புஸ்வானம், இரண்டு தரைசக்கரம், இரண்டு மத்தாப்புகளை வேண்டுமானால் வெடிக்கலாம். வாங்கிவைத்த மீதமுள்ள பட்டாசுகளை எப்போது வெடிப்பது?

``சுற்றுசூழல் மாசடைகிறது'' என்று ஒரே ஒரு காரணத்தை காட்டி இத்தகைய ஆணையை பிறப்பித்துள்ளது. கேலிக்கூத்தாக இருக்கிறது..!

1) தமிழ்நாட்டில், மாவட்டத்திற்கு மாவட்டம் ஒரு தொழில்சாலைகள் இருக்கின்றன. அதன் மூலமாக வெளியேறும் கழிவுகளால் சுற்றுச் சூழல் மாசடைவதில்லையா?

2) குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய ``சிமெட் தொழில் சாலைகளினால்'' மாசேர்ப்பட்டு, அங்கு வசிக்கும் பலருக்கும் தோல் நோய் ஏற்படுகின்றதே..! அது கேடு இல்லையா?

அரியலூர் சிமெட் தொழிற்சாலை

3) ஆறுகளையும், ஏரிகளையும் தூர்வாராமல், அதனை அசுத்தம் செய்வது மூலமாக நோய்கள் பரவுகிறதே அது தெரியவில்லையா?

இவைகளை எல்லாம் சொன்னால், தொழிற்சாலைகளில் பலரும் வேலை செய்கிறார்கள். தடை செய்தால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். என்று  அரசு ரீல் உடும். சரி... பட்டாசு வெடிப்பதால் நன்மையே இல்லையா...?

பட்டாசு வெடிப்பதால் நன்மைகள்:

1) தற்போது மழைக்காலம் என்பதால், ``டெங்கு'' போன்ற கொசுவினால் ஏற்படும் நோய்கள் பரவுகின்றன. பட்டாசு வெடிப்பதன் மூலம் கொசு கணிசமாக குறைகிறது. நோயின் பரவல் தடுக்கப்படுகிறது.

2) சிவகாசியில் எண்ணற்ற பல பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றதே... உங்களின் கட்டுப்பாட்டால் பட்டாசு தொழில் பாதிக்காதா? அங்கு இருக்கும் தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை

3) ஒன்றாக மக்கள் அனைவரும்கூடி, ஒருவருக் கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறார்களே... அந்த ஒற்றுமை வேண்டாமா? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

காற்று மாசடைகிறது என்று தெரிகிறதல்லவா... அதற்கு என்ன செய்திருக்க வேண்டும்... ரசாயனம் கலக்காது ``பசுமை பட்டாசுகளை'' ஊக்கம் செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழில்சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, ``இனி நீங்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். ரசாயன பட்டாசுகளை தயாரித்தால் உரிமம் ரத்து செய்யப்படும்'' என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நேரம் பட்டாசு தொழில்சாலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, பசுமை பட்டாசுகளை ஊக்கப்படுத்திருக்கலாம். அப்படி செய்தால், ஏன் இந்த நேரக்கட்டுப்பாடுகள்?

பசுமை பட்டாசு

சரி.. இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு சாத்தியமா? அதுவும் இல்லை. அனைவரும் கட்டுப்பாட்டினை மீறியே பட்டாசுகளை வெடிக்கிறார்கள். எத்தனை நபர்களுக்கு அபராதங்களை விதிக்க முடியும்? சாத்தியமா என்ன...? 

அப்போது... சாத்தியப்படாத ஒரு சட்டம்தான் இந்த பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு. செய்ய வேண்டியதை ஒருபோதும் செய்யாது, யாருக்கான இந்த நேரக்கட்டுப்பாடு... இந்து மக்களுக்கா?!.. உங்களின் நோக்கம் என்ன?

இந்து பண்டிகையை மட்டும் எதிர்க்கும் அரசுகள்:

இந்த அரசு அந்த அரசு என்று இல்லை. எந்த அரசாக இருந்தாலும் சரி.. இந்து மக்கள் இளிச்சவாயன். என்ன... தி--- கட்சிக்கு, அதி...... கட்சி பரவாயில்லை. தி--- கட்சி தீபாவளிக்கு வாழ்த்துகூட சொல்லாது. அதி...... கட்சி அப்படியில்லை வாழ்த்து சொல்லும், அதுதான் வித்தியாசம். நன்கு கவனியுங்கள்...

1) விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு.

2) வைகுண்ட ஏகாதசிக்கு கட்டுப்பாடு.

3) பொங்கல் பண்டிகைக்கு கட்டுப்பாடு.

4) அம்மன் திருவிழாவிற்கு கட்டுப்பாடு.

5) தேர் திருவிழாவிற்கு கட்டுப்பாடு.

6) தீபாவளிக்கு கட்டுப்பாடு.


இப்படி கட்டுப்பாடு.. கட்டுப்பாடு என்று இந்து பண்டிகைகளுக்கும்,  விழாக்களுக்கும் மட்டும் எதற்காக கட்டுப்பாடுகள்? யாரை திருப்தி படுத்த? இந்துக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லக்கூடாதா? நான் இங்கு ஒரு போதும் பிற மதத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டமாட்டேன். அதனை அவர்கள் சரிசெய்துக் கொள்வார்கள். என் மதத்தை ஏன் புண்படுத்துறீர்கள் என்பதைத்தான் முன்வைக்க முயல்குறேன்.

ஆக, இம்முறையும் யாம் (இந்துக்கள்) பொறுத்துக்கொள்கிறோம். வருங்காலங்களில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை விதிகும்  பதிலாக, ``பசுமை பட்டாசுகளை'' தயார் செய்ய ஆணை பிறப்பித்தால் நன்றாக இருக்கும். கடுமையான காற்றில் மாசு உள்ள நகரமான டெல்லிக்கே அம்மாநில அரசு பட்டாசு வெடிக்க அதிக நேரத்தை கொடுத்துள்ளது. தமிழகத்திக்கு என்ன கேடு..?

மக்களே... பட்டாசுகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். 2026 மே மாதம், ஒட்டுமொத்தமாக பட்டாசுகளை கொளுத்தி போடலாம்!

நன்றி

 - ஆசிரியர்

  ----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 17.10.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்